கோட்சேவும், மோடியும் ஒரே கொள்கையுடையவர்கள் : குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் ராகுல் காந்தி ஆவேசம்

மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவும், பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே கொள்கையைக் கொண்டவர்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்..!

Advertisement

கேரள மாநிலம் வயநாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக “அரசியலமைப்பைப் பாதுகாப்போம்” என்ற பேரணி நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி,

“ஒன்றும் தெரியாத நபர் ஒருவர் காந்தியின் கொள்கைக்கு சவால் விடுக்க முயற்சிக்கிறார். அவர் வெறுப்புணர்வுகள் நிறைந்த சூழலை உருவாக்குகிறார். ஒரே கொள்கைதான். நாதுராம் கோட்சேவும், நரேந்திர மோடியும் அந்த ஒரே கொள்கை மீதுதான் நம்பிக்கை கொண்டுள்ளனர். கோட்சேவின் கொள்கை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்பதைக் கூற மோடிக்கு தைரியம் கிடையாது. இதைத் தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை.

இந்தியர்கள் தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். யார் இந்தியர் என்பதைத் தீர்மானிக்க நரேந்திர மோடி யார்.? அவருக்கு இதற்கான அதிகாரத்தைக் கொடுத்தது யார்..?

நான் இந்தியன் என்பது எனக்குத் தெரியும், அதை யாரிடமும் சென்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதேபோல் 140 கோடி மக்களும் தாங்கள் இந்தியர் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை” என்றார்.

Show More
Back to top button