மருத்துவ கழிவுகளுடன் சீன கப்பல் தமிழகம் வருகை

சீனாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது

Advertisement

சீனாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில் சென்னை துறைமுக பொறுப்பு கழக உயர்மட்டக்குழு அதிகாரிகள் கூட்டம் நேற்று நடந்தது.

அப்போது சீனாவில் இருந்து மருத்துவ கழிவுகளுடன் துறைமுகத்துக்கு வந்துள்ள அந்த கப்பலை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்தும், ஒருவேளை கப்பலை அனுமதித்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து தகவல்கள் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை

Show More
Back to top button