குட்டி எலி அவ்வளவு ருசியாவா இருக்கு.? – உயிருடன் சாப்பிடும் சீன இளைஞர் | கண்டதை யெல்லாம் சாப்பிட்டா நோய் வராம.?

குட்டி எலி அவ்வளவு ருசியாவா இருக்கு? – உயிருடன் சாப்பிடும் சீன இளைஞர்

Advertisement

கரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாம்பு மூலம் பரவிய வைரஸ்தான் காரணம் என கூறப்படும் நிலையில், அசைவ உணவுகளை சாப்பிட வேண்டாம் என சீனர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

உலகமே கரோனா வைரஸ் பாதிப்பால் அச்சமடைந்துள்ள நிலையில், சீனாவில் இளைஞர் ஒருவர் உயிருடன் உள்ள குட்டி எலிகளை சாஸில் நனைத்து சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது.

சீனாவில் உள்ள திரி ஸ்ஹூக்ஸ் என்ற உணவு வகைத் தடை செய்யப்பட்டுள்ளது. அது வேறொன்றுமில்லை குட்டி எலிகளை உயிருடன் அப்படியே ஒரு வகை சாஸில் நனைத்து சாப்பிடுவதுதான்.

தட்டில் குட்டி எலிகள் நெளிந்து கொண்டிருக்கும்போது, அதை சாப் ஸ்டிக்கில் அலேக்காக எடுத்து இளைஞர் ஒருவர் அப்படியே சாப்பிடுகிறார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாம்பு மூலம் பரவிய வைரஸ்தான் காரணம் என கூறப்படும் நிலையில், அசைவ உணவுகளை சாப்பிட வேண்டாம் என சீனர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனை பொருட்படுத்தாமல் இளைஞர் குட்டி எலிகளைச் சாப்பிடுவது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Show More
Back to top button