
குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி சட்டப்பேரவையைக் கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பேரணியில் லட்சத்துக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
குடியுரிமை சட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய சட்டங்களை தமிழகத்தில் நடைமுறைபடுத்த மாட்டோம் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று பேரணி நடத்தியது