
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி மதுரையில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்தனர்
மக்களால் பாராளுமன்ற சிங்கம் என்று அழைக்கப்படும் மஜ்லிஸ் கட்சி அசாதுதீன் உவைசி (M.P) கண்டன உரையாற்ற இருந்தார்
மதுரையில் கண்டன உரையாற்றி சென்றுவிட்டால் போராட்டங்கள் மேலும் சூடு பிடிக்கும் என்பதை உணர்ந்த அரசு பலமுனைகளில் பொதுக்கூட்டம் நடக்க விடாமல் தடுப்பதற்கு முயற்சிகளை நேற்றுவரை செய்தார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்கள்
இந்த சூழ்ச்சியை அறிந்த மஜ்லிஸ் கட்சியினர் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர், உடனடியாக விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கியது
பொதுக்கூட்டம் நடக்கும் இடம்
மதுரை அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் அருகில் மிகவும் பிரமாண்டமான முறையில் நாளை 22-1-2020 மாலை 4 மணிஅளவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.