விஜய் மல்லையாவின் சொகுசு கப்பலை விற்க அனுமதி வழங்க வேண்டும் – கதார் நிறுவனம் வழக்கு

தொழிலதிபர் விஜய்மல்லையா பல்வேறு வங்கிகளிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி கடன் வாங்கினார். பின்னர் கடனை செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்நிலையில் கத்தார் தேசிய வங்கியின் துணை நிறுவனமான அன்ஸ்பச்சர் நிறுவனம் லண்டன் கோர்ட்டில் விஜய் மல்லையா மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது அன்ஸ்பக்சர் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“விஜய் மல்லையா ரூ.280 கோடி கடனை பெற்று பிரான்ஸ் நாட்டின் ‘லி செயிடன்ட் மார்கரெட்’ தீவில் ‘லீ கிராண்ட் ஜார்டின்’ என்ற பிரமாண்ட மாளிகையை வாங்கினார்.

அந்த சொகுசு பங்களாவில் 17 படுக்கை அறைகள், ஒரு சினிமா தியேட்டர், மதுபானக் கூடம், ஹெலிகாப்டர் தளம் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன.

இந்த சொகுசு மாளிகையை விஜய் மல்லையா பராமரிக்காமல் விட்டு விட்டார். இதன் காரணமாக அந்த சொகுசு பங்களாவின் மதிப்பு 30 சதவீதம் குறைந்து விட்டது.

இதனால் பங்களாவை விற்றாலும் கடன் தொகையை முழுவதும் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கடனுக்கு உத்தரவாதமாக இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையாவின் சொகுசு கப்பலை விற்று, அந்த தொகையை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மல்லையாவின் சொகுசுகப்பலில் பணியாற்றிய ஊழியர்களுக்குசம்பளம் தராததால்அந்த கப்பலைகாப்பீட்டு நிறுவனம்முடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

Show More
Back to top button