இடுப்பைத் தொட்டதால் கடுப்பான நாய் ! புகைப்படம் எடுத்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!
இடுப்பைத் தொட்டதால் கடுப்பான நாய் ! புகைப்படம் எடுத்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!முகத்தில் 40 தையல்கள் போடும் அளவுக்கு கடித்துக் குதறியிருக்கிறது அந்த நாய். நாயை கட்டிப்பிடிக்க முயன்றதில் அது கடுப்பாகிக் கடித்துள்ளது.
நண்பரின் நாயுடன் புகைப்படும் எடுக்கும்போது, இளம்பெண்ணை அந்த நாய் முகத்தில் கடித்து குதறியது. இதன்காரணமாக அவருக்கு முகத்தில் 40 தையல் போடப்பட்டுள்ளது.
அர்ஜெண்டினாவில் உள்ள டுகுமனைச் சேர்ந்த 17 வயதான லாரா ஜான்சன் தனது நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார். நண்பர் வளர்த்து வரும் கென் என பெயரிடப்பட்டுள்ள ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாயுடன் புகைப்படம் எடுக்க விரும்பியுள்ளார் லாரா. நண்பரிடம் போனை கொடுத்து நாயுடன் தன்னை புகைப்படம் எடுக்க கூறியுள்ளார். அப்போது நாயை கட்டிபிடிக்க முயன்றபோது அதன் இடுப்பில் கை வைத்துள்ளார். இதனால் கடுப்பான நாய் லாராவின் முகத்தை கடித்து குதறியது.
இதில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் கிட்டத்தட்ட 40 தையல்கள் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள லாரா, ” என் மீதுதான் தவறு, அதற்கு இடுப்பை தொட்டது பிடிக்காமல் போயிருக்கலாம். கென்னை எதுவும் செய்து விடாதீர்கள். “ என காவல் துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. லாரா பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு இதுவரை 3 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். அதோடு பலரும் அறிவுரை வழங்கி வருகின்றனர். அதில் சிலர் நாயை நடுவில் கட்டிப்பிடித்தால் அதற்கு பிடிக்காது என்றும், எங்கே நாயை தாக்கிவிடுவீர்களோ என பயந்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.