வங்கியில் NPR ஆவணம் காட்டினால் தான் வங்கி கணக்கு இயக்க முடியுமா.? உண்மை தான் என்ன.?

NPR ல் பதிவு செய்து ஒப்புகை சீட்டை வங்கி கணக்கில் சமர்பித்தால் மட்டும் வங்கி கணக்கு செயல் படும் ( NPR ஒப்புகை சீட்டை optional ஆக இப்போது வைத்திருக்கிறார்கள் ) CBI வங்கி விளம்பரம் செய்திருக்கிறது..!

Advertisement

NPR ,NRC கொண்டு வந்து அவர்கள் வங்கி கணக்கை முடக்குவதை விட இப்பொழுதே நாம் வங்கி புறகணிப்பில் ஈடுபடவேண்டும்.

நீங்கள் சார்ந்திருக்கும் கட்சி இயக்க தலைமைகளுக்கு இச்செய்தியை கொண்டுசேருங்கள். வங்கி புறகணிப்பு போராட்டம் மட்டுமே உடனடி தீர்வு தரும்..!

என கடந்த மூன்று நாட்களாக சமூக வலைத்தளங்களில் தனத்தந்தி நாளிதழில் வெளியிட்டதை போன்று ஒரு செய்தி உலாவிக் கொண்டிருக்கிறது

அதாவது Central Bank of India என்கிற வங்கி KYC ஆவணங்களை சமர்ப்பிக்க அவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு ஒரு சில பட்டியல்களை வெளியிட்டு உள்ளது

இந்த செய்தி உண்மையா என பலரும் கேட்டு வருகின்றனர், எனவே அதை ஆய்வு செய்தோம்,

ஆம் அந்த செய்தி உண்மைதான்

ஆனால் அதே சமயம்

👇 வங்கி தரப்பில் விளக்கம் 👇 தரப்பட்டுள்ளது

Central Bank Of India தனது வாடிக்கையாளர்களுக்கு KYC ஆவணங்கள் சம்மந்தமாக இரு விளம்பரம் வெளியிட்டு இருந்தது அதில் NRP- தேசிய மக்கள் பதிவேட்டில் வழங்கப்பட கடிதம் என்று ஒரு வரியும் அதில் இடம் பெற்றுள்ளது

இந்த விளம்பரம் சமுக வலைத்தளத்தில் பரவி அனைவரும் பேசும் பொருளாக மாறியது

அதன் பிறகு அதன் நிலைப்பாட்டை மாற்றி பின்வாங்கியுள்ளது..!

வங்கியால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், NRP ஆவணம் கட்டாயமில்லை. இது ஒரு கூடுதல் ஆவணம், ”என்று ரெய்ன் பஜார் கிளையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. 👇👇👇

வங்கியின் மறுப்பு பலவீனமாக உள்ளது, ஏனெனில் அது ஏன் முதலில் வழங்கப்பட்டது, ஏன் பின்வாங்குகிறது என்று சொல்லவில்லை.

மேலும் அனைத்து வங்கியில் kyc என்பது கட்டாயம்

KYC ஆவணங்களில் மேலே உள்ள விளம்பரத்தில் உள்ள ஏதாவது ஒன்று கொடுத்தால் போதும் அனைத்தும் கொடுக்க வேண்டியதில்லை

👇👇👇 ஆதாரம் 👇👇👇

https://www.siasat.com/central-bank-india-backtracks-its-requirement-npr-1792221/amp/

Show More
Back to top button