திருடிய ஆட்டோவில் உரிமையாளரையே சவாரிக்கு அழைத்து சென்ற திருடன்

0
213

சென்னையில் திருடிய ஆட்டோவில் உரிமையாளரையே சவாரிக்கு அழைத்துச் சென்ற திருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கே.கே.நகரில் உள்ள ராணி அண்ணா நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் பிரித்விராஜ் வசித்து வருகிறார்.வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்தஇவரின் ஆட்டோ கடந்த 2ஆம் தேதி இரவு திருடுபோனது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரித்விராஜ் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலை பரங்கிமலை சென்ற பிரித்விராஜ் அந்த வழியாக சென்ற ஆட்டோ ஒன்றை மறித்து சவாரிக்கு அழைத்துள்ளார். பார்ப்பதற்கு அவரது ஆட்டோ போல் இருந்த நிலையில் பதிவ்பெண் மட்டும் மாற்றப்பட்டிருந்தது.

உள்ளே அமர்ந்த பின்னர்தான் அது காணாமல்போன தனது ஆட்டோ என்பது உறுதிசெய்துக்கொண்ட திருடனை பிடிக்க எண்ணி கே.கே.நகர் செல்ல வேண்டும் என கூறியுள்ளார். அங்கிருந்து தனது ஏரியாவிற்குள் வந்திறங்கியதும் பிரித்விராஜ் ஆட்டோ ஓட்டுநரை பிடித்து திருடன்.. திருடன் என கூச்சலிட்டுள்ளார்.

இதனால் அங்கிருந்த மக்கள் திருடனை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் நங்கநல்லூரைச் சேர்ந்த நாகராஜ் என்பதும், வறுமை காரணமாக ஆட்டோ திருடி பதிவு எண்களை மட்டும் மாற்றி ஆட்டோவை ஓட்டி வந்ததும் தெரிய வந்தது.