தாஜ்மஹாலினுள் சிவனை வைத்து வழிபாடு செய்ய முயன்ற இந்து மகாசபா உறுப்பினர்கள் கைது

0
249

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலினுள் சிவனை வைத்து வழிபாடு செய்ய முயன்ற இந்து மகாசபா உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.


நேற்று ,இந்து மகாசபாவை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் தாஜ்மஹாலினுள் சிவனை வைத்து வழிபாடு செய்ய முயன்றதாகவும், அப்போது மத்திய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு மாநில காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாபர் மசூதியை தொடர்ந்து தாஜ்மஹாலை குறிவைக்கும் வலதுசாரிகள் – காவிக்கொடி ஆட்டியவர்கள் கைதுமேலும் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் பெண் என்றும் தி வயர் செய்தி கூறுகிறது.

அவர் பெயர் மீனா திவாகர் என்றும் அவர் இந்து மகாசபையின் மண்டல தலைவர் என்றும், அவர் உடன் வந்த இருவரும் இந்து மகாசபையின் உறுப்பினர்கள் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த 2017 ஆம் ஆண்டு பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த வினய் கட்டியார், இந்துக் கோவிலை இடித்துக் கட்டப்பட்டது தாஜ்மஹால் என்று கூறியிருந்தார்


முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட தாஜ்மஹால் தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.