உபரி நீரை தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க முடியாது – பாஜக முதல்வர் எடியூரப்பா

0
108

காவிரி-வைகை -குண்டர் நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு வேண்டி தமிழக அரசு அடித்தளம் அமைத்தமைக்கு கர்நாடகா பாஜக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது..!தமிழகம் உபரி காவிரி நீரை பயன்படுத்த தனது அரசாங்கம் அனுமதிக்காது என்றும், கர்நாடக மாநில நலன்களைப் பாதுகாக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறியுள்ளார் கர்நாடக பாஜக முதலமைச்சர் பி.எஸ்.யெடியுரப்பா..!14,400 கோடி ரூபாய் செலவில் காவிரி-வைகாய்-குண்டர் (262 கி.மீ) நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை அடித்தளம் அமைத்த நிலையில் காவிரி நதி நீர் பகிர்வு குறித்த பிரச்னை மீண்டும் வெடித்துள்ளது..!இந்த திட்டம் வெள்ளம் ஏற்படும் சமயங்களில் 6,300 கன அடி வரை உபரி நீரை திசை திருப்பி, குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் அது மட்டுமின்றி தெற்கு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும்..!

இந்த திட்டத்திற்கு எதிராக மத்திய பாஜக அரசு முன் ஆட்சேபனைகளைதெரிவிக்க உள்ளதாக கர்நாடக பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக யெடியூரப்பா திங்களன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “நாங்கள் அந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம், நாங்கள் வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தமிழ்நாட்டையோ அல்லது வேறு மாநிலங்களையோ உபரி தண்ணீரைப் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் கூறினார்..!