தேஜஸ் விரைவு ரயிலில் கெட்டுப் போன உணவு : ஒரு லட்சம் ரூபாய் அபராதம்

தேஜஸ் விரைவு ரயிலில் கெட்டுப் போன உணவு : ஒரு லட்சம் ரூபாய் அபராதம்

Advertisement

தேஜஸ் அதி விரைவு ரயிலில் பயணிகளுக்கு கெட்டுப்போன உணவை வழங்கிய ஒப்பந்ததாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தாக ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.

கடந்த 11 ஆம் தேதி கோவாவில் இருந்து மும்பை சி.எஸ்.டி.க்குச் சென்ற தேஜாஸ் விரைவு ரயிலில் பயணித்தவர்கள் இந்த புகார் அளித்துள்ளனர்.

தேஜஸ் அதி விரைவு ரயிலில் இரவு உணவாக வழங்கப்பட்ட சப்பாத்தி மற்றும் புலாவில் கெட்ட வாடை வீசியதாகவும், அவற்றை சாப்பிட்ட பயணிகளில் பலர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மும்பை-அகமதாபாத் சதாப்தி ரயிலில் இதே போன்று கெட்டுப் போன உணவு வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், பயணிகள் வாந்தி எடுத்ததாக கூறப்படுவதை ஐ.ஆர்.சி.டி.சி. மறுத்துள்ளது

Show More
Back to top button