சதம் அடித்த பெட்ரோல் விலை ரூ.100.16-க்கு விற்பனை

0
71

இந்திய வரலாற்றில் முதல்முறையாக பெட்ரோல் விலை சதமடித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்தாண்டு கொரோனா காரணமாக மார்ச் 22 ஆம் தேதி முதல் மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் மாதம் முதல், மீண்டும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.

இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளை கவலையில் ஆழ்த்தியுள்ள நிலையில், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள பர்பானி மாவட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். நேற்று காலை பெட்ரோல் விலை 28 பைசா உயர்வுக்குப் பிறகு, சில்லறை விற்பனைக்கு சேர்க்கைகளுடன் கூடிய பெட்ரோல் விலை ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கிடையில் சென்னையிலும் பெட்ரோல் விலை ரூ.90ஐ கடந்துள்ளது. இன்று பெட்ரோல் விலை 23 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.91.17 காசுகளுக்கும் , டீசல் விலையில் 27 காசுகள் உயர்ந்து ரூ.84.42 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் தமிழகத்திலும் பெட்ரோல் விலை சதமடிக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் விழிபிதுங்கியுள்ளனர்.