மேற்கு வங்கம் : காரில் போதைப்பொருள் – பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் கைது

0
115

மேற்கு வங்காள மாநில பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி (Yuva Morcha) பொதுச் செயலாளரான பாமெலா கோஸ்வாமி 100 கிராம் கொக்கைன் கொண்டு சென்ற குற்றத்திற்காக கைது செய்துள்ளனர் போலீசார். சில லட்சங்கள் மதிப்புமிக்க இந்த கொக்கைனை அவரது மணி பர்ஸிலும், கார் சீட்டுக்கு கீழும் இருந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர். அவர் பயணித்த காரில் அவருடன் இருந்த பாஜக இளைஞரணியை சேர்ந்த பிராபிர் குமார் தேவும் கைது செய்யப்பட்டுள்ளார்..!

நியூ அலிப்பூர் பகுதியில் வைத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். பாமெலா கோஸ்வாமியை கைது செய்த போது கூச்சலிட்ட படி போலீஸ் வேனில் ஏறினார்..!


“காவல் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. என்ன வேண்டுமானாலும் அவர்களை வைத்து ஆளும் அரசு செய்யலாம். கொக்கைனை அவரது காரில் யாரோ வைத்துள்ளார்கள்” என சொல்லியுள்ளார் பாஜகவின் சமிக் பட்டாச்சார்யா..!

“இந்த சம்பவத்தினால் மேற்கு வங்கத்திற்கு தான் களங்கம். இது தான் வளர்ந்து வரும் பாஜக உறுப்பினர்களின் உண்மை முகம். இதற்கு முன்னதாக பாஜக உறுப்பினர்களின் பெயர் குழந்தை கடத்தல் தொடர்பான வழக்குகளிலும் அடிபட்டுள்ளது” என்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரிமா பட்டாச்சார்யா..!

பாமெலா கோஸ்வாமிக்கு போதை பொருட்களை கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனால் அவரை நீண்ட நாட்களாக பின்தொடர்ந்த பிறகே கைது செய்துள்ளோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்..!