KOO App பாதுகாப்பானது இல்லை, பயனாளர்களின் தகவல்கள் கசிவதாக பிரெஞ்சு சைபர் கிரைம் தகவல்

0
8

டிவிட்டருக்கு மாற்றாக, இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ”கூ” செயலியில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்..!

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பொய் பிரச்சாரங்களை பரப்பும் டிவிட்டர் கணக்குகளை நீக்க அந்நிறுவத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில் டுவிட்டர் அதனை ஏற்க மறுத்ததால் உரசல் ஏற்பட்டது. இதையடுத்து அதிருப்தி காரணமாக மத்திய அரசின் பல துறைகள் மட்டுமின்றி அமைச்சர்கள் பலரும் டுவிட்டருக்கு மாற்றாக கூ செயலியை பயன்படுத்த தொடங்கினர்..!

இந்த நிலையில் கூ செயலில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகவும், பயனாளர்களின் தகவல்களை சீனாவுக்கு வழங்கியிருப்பதாகவும் பிரெஞ்சு சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் ராபர்ட் பாப்டிஸ்ட் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்..!

ஆய்வின் முடிவுகளை அறிவித்துள்ள அவர், கூ செயலி பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை, அதாவது பயணர்களின் மின்னஞ்சல் முகவரி, திருமண தகவல், Identifiers, Search History, தொலைபேசி எண்கள் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட பல முக்கிய தரவுகளை சீனாவுக்கு தாரை வார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்..!

மேலும் கூ செயலியின் தொழில்நுட்பத்தில் பல பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், ஆதார் அமைப்பில் கூட பல தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் பல ஸ்கிரீன் ஷாட்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்..!