குற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா

0
61

கோவையில் ஒரே நேரத்தில் 3 கொலை உட்பட 30க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய பிரபல தாதா சீர்காழி சத்யா முன்னாள் அமைச்சர நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
கோவையில் ஒரே நேரத்தில் 3 கொலை உட்பட 30க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய பிரபல தாதா சீர்காழி சத்யா முன்னாள் அமைச்சர நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் தமிழகம், புதுவை ரவுடிகள் அதிக எண்ணிக்கையில் இணைவது சர்ச்சையாகி வருகிறது. சேலத்தில் 5 முறை குண்டர் சட்டத்தில் கைதான ரவுடி முரளிக்கு தமிழக பாஜகவில் இளைஞரணியில் பொறுப்பு வழங்கப்பட்டது. அதேபோல், வடசென்னையை கலக்கிய ரவுடி கல்வெட்டு ரவி, சென்னையை சேர்ந்த ரவுடி சூர்யா, வடசென்னை கஞ்சா வியாபாரியாக வலம் வந்த புளியந்தோப்பு அஞ்சலை ஆகியோர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தனர்.

இந்நிலையில், கும்பகோணத்தை சேர்ந்தவர் ராஜா. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் இவர். கடந்த 2017ம் ஆண்டு கும்பகோணத்தில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கும் நோக்கில் கொலையாளிகளை தீர்த்துக்கட்ட ராஜாவின் ஆதரவாளர்கள் முடிவு செய்தனர். ரவுடி மோகன்ராமுக்கு இடதுகரமாக செயல்பட்டு வந்த தாதா சீர்காழி சத்யா, வழக்கறிஞர் ராஜாவை கொலை செய்த 3 பேரை கோவையில் சில மாதங்களுக்கு முன்னர் ஓட ஒட விரட்டி படுகொலை செய்தார். அதேபோல், சீர்காழியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த விடுதலை சிறத்தைகள் கட்சியை சேர்ந்த சகோதரர்கள் இருவரையும் சீர்காழி சத்யா கொடூரமாக வெட்டி கொலை செய்தார். இவர் மீது 5 கொலை 30க்கும் மேற்பட்ட வழக்குகள் அனைத்து காவல் நிலையங்களிலும் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், பிரபல தாதா சீர்காழி சத்யா சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முன்னாள் அமைச்சர் ரயினார் நாகேந்திரன் மற்றும் இளைஞரணி தலைவர் வினோஜ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அதேபோல், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் வி.எம்.சி.சிவக்குமார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளியான எழிலரசி புதுச்சேரியில் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.