மனநிலை சரியில்லாத வயதான மூதாட்டியை முதியோர் காப்பகத்தில் சேர்த்த மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய பணி

0
13

ஈரோடு கிழக்கு மாவட்டம் பெரிய அக்ரகாரம் பகுதிக்கு அருகில் உள்ள சுண்ணாம்பு ஓடையில் மனநிலை சரியில்லாத வயதான மூதாட்டி ஒருவர் ஆதரவற்று பரிதவித்துக் கொண்டிருந்த நிலையில், அதனைக் கேள்வியுற்ற பெரிய அக்ரஹாரம் பகுதி 6 வது வார்டுகிளை தலைவர் K.J.நிஜாமுதீன் உடனடியாக
ஈரோடு கிழக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் B.சலீம் அவர்களிடம் இதனைத் தொலைபேசியில் தெரிவித்தார்..!


அவர் துரிதமாக செயல்பட்டு ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய சகோதரர் K.S.தென்னரசு அவர்களின் உதவியுடன்
ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்..!


உடன்மாநகர துணை தலைவர் K.அக்பர்,
,7வது வார்டு நஞ்சப்பா நகர் கிளை தலைவர் B.அல்தாப்,கிளை பொருளாளர் S. சாஹித்,
7 வது நகர் கிளை தலைவர் அபுல் ஆகியோர் இந்த களப்பணியில் பங்குகொண்டனர்..!