விவாதிக்க துண்டு சீட்டு இல்லாமல் வரத் தயாரா? – மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் சவால்

0
10

அதிமுக அரசு மீது ஊழல் புகார் கூறும் ஸ்டாலின், அதுகுறித்து தன்னுடன் விவாதிக்க, துண்டு சீட்டு இல்லாமல் வரத் தயாரா, என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்..!எம்ஜிஆரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அசோக் நகரில், அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட, எம்ஜிஆர் பெயரை கூறவேண்டிய சூழல் உள்ளது என்றும், அதிமுக தான் எம்ஜிஆரின் வாரிசு, என்றும் குறிப்பிட்டார்..!

திமுக ஒரு குடும்ப கட்சி, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, மக்களை குழப்பி ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார், என்றும் குறிப்பிட்டார். ஏழை என்ற சொல் தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம், என குறிப்பிட்ட முதலமைச்சர், அதிமுக அரசு மீது ஊழல் புகார் கூறும் ஸ்டாலின், அதுகுறித்து தன்னுடன் விவாதிக்க, துண்டு சீட்டு இல்லாமல் வரத் தயாரா, என்றும் சவால் விடுத்தார்..!

ஊழல் குறித்து விவாதிக்க தயாரா என்று திமுக ஏற்கனவே கேள்வியை கேட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது..!