புதுமடத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது

0
11

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் தெற்கு மாவட்டம் புதுமடம் கிளை, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இரத்த தான முகாம் இன்று நடைபெற்றது,

இம்முகாமில் ராமநாதபுரம் தெற்கு மாவட்ட தலைவர் ஏ.முகமது அயூப்கான் அவர்கள் துவக்கி வைத்தார்..! புதுமடம் கிளை தலைவர் பரீத் முன்னிலை வகித்தார்..!

ராமநாதபுரம் அரசு இரத்த வங்கி மருத்துவர் பாத்திமா பதுல் ராணி தலைமையில் மருத்துவமனை பணியாளர்கள் ரத்த கொடையாளர்கள் 30 பேரிடம் இரத்தம் சேகரித்தனர். புதுமடம் கிளை பொருளாளர் தாவூது இப்றாஹீம், முன்னாள் தலைவர் சீனி பாதுஷா, முன்னாள் செயலாளர் அபுல் ஹூதா , மருத்துவரணி சகுபான் உள்பட பலர் கலந்து கொண்டனர்..!