நாட்டின் மோசமான 10 முதல்வர்களில் 7 பேர் பாஜக முதல்வர்கள்

0
31

டெல்லி: நாட்டின் மோசமான 10 முதல்வர்கள் பட்டியில் பாஜக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறும் 7 மாநிலங்களின் முதல்வர்கள் இடம்பெற்றுள்ளனர்.


ஐஏஎன்எஸ்- சிவோட்டர் இணைந்து Nation 2021 survey என்ற கருத்து கணிப்பை நடத்தியது. பிரதமர் மோடி, மத்திய பாஜக அரசின் செயல்பாடு, மாநில முதல்வர்கள் செயல்பாடு, பிரதமர் பதவிக்கு மோடி, ராகுல் யாருக்கு ஆதரவு என பல்வேறு அம்சங்களுடன் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் 543 லோக்சபா தொகுதிகளில் 30,000 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் நாட்டிலேயே ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக்தான் சிறந்த முதல்வராக தேர்வாகி உள்ளார். அவருக்கு அடுத்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இடம் பிடித்துள்ளனர்.

நாட்டிலேயே மோசமான 10 முதல்வர்கள் பட்டியலில் 7 பேர் பாஜக அல்லது பாஜக தலைமையிலான கூட்டணி அரசு நடைபெறும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். நாட்டில் மிக மோசமான முதல்வராக உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்த சிங் ராவத், அவருக்கு அடுத்ததாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இடம்பெற்றுள்ளார். இந்த பட்டியலில் பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அமரீந்தர்சிங்கும் இடம்பிடித்துவிட்டார்.


டாப் 10 மாநில முதல்வர்கள்: ஒடிஷா, டெல்லி, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், கோவா, குஜராத்.

மோசமான 13 மாநில முதல்வர்கள்: அஸ்ஸாம் (11), கர்நாடகா (12), பீகார் (13), இமாச்சல் (14), உபி (15), ஜார்க்கண்ட் (16), ராஜஸ்தான் (17), தமிழகம், (18) தெலுங்கானா (19), பஞ்சாப் (20), ஹரியானா (21), உத்தரகாண்ட். (22)