புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததை சரியான வாய்ப்பு என கொண்டாடிய அர்னாப்

0
13

புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில், இது பெரும் வெற்றி என அதனை கொண்டாடியதாகவும், மேலும் இந்தியாவின் ராணுவ ரகசியங்களை அறிந்து வைத்து, அதனை வெளியிட்டதாகவும் சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் அர்னாப் கோஷ்வாமி மீது எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


2019 ம் ஆண்டின் பிப்ரவரி 14-ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 ராணுவவீரர்கள் உடல் சிதறி பலியானார்கள். நாட்டை மட்டுமன்றி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜெய்ஸ்-இ-முகமது என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. கடும் பாதுகாப்பு நிறைந்த காஷ்மீரில் சுமார் 30 கிலோ மீட்டருக்கு மேல் வெடி மருந்து நிரப்பப்பட்ட வாகனத்தை தீவிரவாதி எப்படி கொண்டு சென்றான் என்பது உள்ளிட்ட பல சந்தேகங்கள் எழுந்தன. தாக்குதல் பற்றி முன்கூட்டியே அரசுக்கு தகவல் வந்ததாகவும் ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக அந்த தாக்குதல் நடக்க அரசே உடந்தையாக இருந்தது என்று ராஜீவ் தியாகி என்ற இந்திய விமானப்படையின் முன்னாள் விமானி குற்றம் சாட்டியிருந்தார்.

பணமதிப்பிழப்பால் சரிந்த தன் செல்வாக்கை பலப்படுத்த பாஜகவே இந்த தாக்குதல் நடக்க காரணமாக இருந்ததாகவும், அதன் காரணமாகவே ராணுவவீரர்கள் சென்ற வழித்தடத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் தாக்குதல் குறித்து தகவல் கிடைத்தும் அதை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த தாக்குதலை தொடர்ந்து பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பால்கோட் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியது. இதன் காரணமாக தாக்குதல் நடந்து 2 மாதங்களுக்கு பின் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கான செல்வாக்கு பலமடங்கு உயர்ந்து அக்கட்சி மாபெரும் வெற்றியை ஈட்டியது.


இந்த தாக்குதல் நடத்தபோது அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்லிக் டிவி இந்த தாக்குதலுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து அதை 24 மணிநேரமும் ஒளிபரப்பியது. மேலும் இந்திய அரசு பாகிஸ்தான் எல்லையில் தொடுத்த தாக்குதலை வைத்து தனது டிஆர்பி ரேட்டிங்கை பல மடங்கு உயர்த்தியது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் டிஆர்பி ரேட்டிங்கில் மோசடி செய்ததாகவும் அதன் மூலம் விளம்பர வாய்ப்புகளை பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.


அதை தொடர்ந்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட அர்னாப் கோஸ்வாமி மஹாராஷ்டிர காவல்துறையால் விசாரிக்கப்பட்டார். அந்த விசாரணையில் டிஆர்பி ரேட்டிங்கில் மோசடி செய்ததாகவும் இதற்காக டிஆர்பி ரேட்டிங்கை வெளியிடும் பார்க் ஆணையத்தில் இருப்பவர்கள் உதவிசெய்த தகவலும் வெளிவந்தது. இதனையடுத்து அர்னாப் கோஸ்வாமி பார்க் ஆணையத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தேஸ்குப்தாவுடன் உரையாடிய 500 பக்கங்கள் கொண்ட உரையாடலை மஹாராஷ்டிர காவல்துறை வெளியிட்டுள்ளது அதை ஆராய்ந்து பார்த்ததில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த உரையாடல்களில் இந்தியா பாகிஸ்தானுக்குள் சென்று நடத்திய பால்கோட் தாக்குதல் நடைபெறும் மூன்று நாட்களுக்கு முன் அர்னாப் கோஸ்வாமி பார்த்தோ தேஸ்குப்தாவுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் தகவலில் சாதாரண தாக்குதலை விட பெரிய தாக்குதல் ஒன்று நடக்கப்போவதாக கூறியுள்ளார். நமது ராணுவம் பாகிஸ்தான் சென்று நடத்தும் தாக்குதல் எப்படி அர்னாப் கோஸ்வாமிக்கு தெரியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த உரையாடலை முன்வைத்து அர்னாப் கோஸ்வாமியை கைது செய்யவேண்டும் என்றும் அவர் மேல் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் டிவீட்டரில் ட்ரென்ட் ஆகிவருகிறது.