சென்னை மாநகராட்சியில் 700 தூய்மை பணியாளர்கள் டிஸ்மிஸ் மனசாட்சியற்ற செயல் : தினகரன் கண்டனம்

0
11

சென்னை: பொங்கல் விழா நேரத்தில் சென்னை மாநகராட்சியில் 700 தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்திருப்பது மனசாட்சியற்ற செயல் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தினகரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல், முன்களப்பணியாளர்களாக நின்ற தூய்மைப்பணியாளர்கள் சுமார் 700 பேரை சென்னை மாநகராட்சி திடீரென வேலையை விட்டு நீக்கி இருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.