உச்சநீதிமன்றம் அமைக்கும் எந்தவொரு குழுவையும் நாங்கள் ஏற்க மாட்டோம்: விவசாயிகள் அறிவிப்பு

0
94

உச்சநீதிமன்றம் அமைத்துள்ள எந்தவொரு குழுவையும் பேச்சுவார்த்தைக்காக நாங்கள் ஏற்க மாட்டோம் என்று டெல்லியில் போராடும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்த இன்று(செவ்வய்க்கிழமை) இடைக்கால தடை விதித்தது .மேலும் விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் குழு அமைக்கப்படும் என்றும், வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை, குறைகளை குழுவிடம் விவசாயிகள்தெரிவிக்க வேண்டும். இந்த குழு எந்த உத்தரவுமோ அல்லது தண்டனையோ விதிக்காது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து ஆலோசித்த பின், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அளித்த பேட்டியில் கூறியதாவது: உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ள குழுவில் இடம் பெற்றுள்ளனர். குடியரசு தினத்தை முன்னிட்டு, போராட்டத்தைமுன் கூட்டியே முடிக்கும் திட்டம் இல்லை. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும்.

மேலும், இதுபோன்ற எந்தவொரு குழுவின் முன்னுமும் நாங்கள் ஆஜராக மாட்டோம் என்று நேற்று நாங்கள் கூறியிருந்தோம். எங்கள் போராட்டம் வழக்கம் போல் தொடரும். இந்த குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் மற்றும் அரசாங்கத்தின் சட்டங்களை நியாயப்படுத்தி வந்தனர் என கூறினார்.

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எந்தவொரு குழுவையும் பேச்சுவார்த்தைக்காக நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூறி நேற்று இரவு ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டோம். சுமைகளை அவர்களின் தோள்களில் இருந்து எடுக்க உச்சநீதிமன்றம் மூலம் ஒரு குழு அமைக்கப்படுவதாக நாங்கள் நம்புகிறோம் என கூறியுள்ளனர்.