3 மணி நேரத்தில் தஞ்சை டூ கோவை 2 மாத குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

0
126

தஞ்சையில் உள்ள நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் மகன் ஆரூரன் என்ற குழந்தை பிறந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில், அந்த குழந்தைக்கு இதய பாதிப்பு இருந்த நிலையில், தஞ்சையில் குழந்தையை பரிசோதித்த தனியார் மருத்துவர்கள் உடனடியாக குழந்தையை கோவையில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

இதனால் குப்புசாமி நாயுடு மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு குழந்தையை மூன்று மணி நேரத்தில் கோவைக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸை பார்த்தசாரதி என்ற நபர் ஒருவர் ஓட்ட முன்வந்து உள்ளார்.இதனை அடுத்து திருச்சி மற்றும் கரூர் மாவட்ட காவல் துறையினர் ஆம்புலன்ஸ் செல்லும் வழிகளை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சீர் செய்ததை அடுத்து உரிய நேரத்திற்கு குழந்தையை கோவையில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் அதிகாலை 5:35 மணியளவில் ஆம்புலன்ஸ் புறப்பட்ட நிலையில் 8:30 மணிக்கு மருத்துவமனையை அடைந்தது. இதனை அடுத்து குழந்தைக்கு தற்போது அறுவை சிகிச்சை நடைபெற்றது.

மேலும் குழந்தை சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் கடவுளை பிரார்த்தனை செய்தனர். மேலும் ஆம்புலன்ஸை ஓட்டிவந்த பார்த்தசாரதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது 😍