டிவிட்டரில் நம்பர் 1 டிரெண்டிங்கில் #IdiotPM: அந்த முட்டாள் பிரதமர் யார்?

0
113

டிவிட்டரில் நேற்று #IdiotPM என்ற ஹேஸ்டேக் நம்பர் 1 டிரெண்டிங்கில் இருந்தது. பிரதமர் ஒரு முட்டாள்’ என்பதே இதன் அர்த்தம்.


இந்த ஹேஸ்டேக் டிரெண்டாக காரணம்:
கோ ஏர் விமான நிறுவனத்தில் பணிபுரிந்த கேப்டன் மிக்கி மாலிக் என்பவரைப் பணி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதற்கு மிக்கி மாலிக் போட்ட ஒரு ட்வீட் “பிரதமர் ஒரு முட்டாள். இதைச் சொல்லும் என்னையும் நீங்கள் முட்டாள் என்று கூறுவீர்கள். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால் நான் பிரதமரில்லை. ஆனால் பிரதமர் ஒரு முட்டாள்” என்று ட்வீட் செய்திருந்தார்.


மாலிக் ட்வீட்டில் எந்தப் பிரதமரைக் கூறுகிறார் என்று குறிப்பிடவில்லை. அவர் பிரதமர் மோடியைத் தான் கூறுகிறார் என்று  புரிந்துகொண்ட கோ ஏர் நிறுவனம் மாலிக்கை பணி நீக்கம் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நெட்டிசன்கள் #IdiotPM ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வைரலாக்கினர்.


மாலிக் மன்னிப்பு கோரி மற்றொரு ட்வீட் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் தனது ட்விட்டர் கணக்கை லாக் செய்திருப்பதால் எதையும் பார்க்க இயலவில்லை. மாலிக் 25 ஆண்டு காலம் இந்திய விமானப் படையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். கார்கில் போரின்போது பணியாற்றிருக்கிறார். ஓய்வுபெற்ற பின்னர் கோ ஏர் விமான நிறுவனத்தில் பணிபுரிந்திருக்கிறார்.


இது குறித்து கேனல் தினேஷ் என்பவர், ”கோ ஏர் நிறுவனத்தில் பணிபுரியும் பைலட்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியே வாருங்கள். அந்நிறுவனத்திற்கு எந்தத் தகுதியும் இல்லை. இப்போது நீங்கள் வாய் திறக்கவில்லை என்றால் மாலிக்குக்கு ஏற்பட்ட நிலை நாளை உங்களுக்கும் ஏற்படலாம்” என்று ட்வீட் செய்துள்ளார்.

ஆனால் மாலிக் போட்டது ஒரு ட்வீட், அதிலும் அவர் வெளிப்படையாக யார் அந்த பிரதமர் என்றுக்கூட குறிப்பிடவில்லை. ஆனால் அவரின் பணி பறிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறே இந்தியாவில் கருத்துரிமையின் நிலைமை இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.