போலீஸ், குற்றவாளிக்கு #போட்டோஷாப்_மாஸ்க்: நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய உ.பி போலீஸ்

0
29

உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் காவல்துறையினர் ஒரு போலீஸ்காரர் மற்றும் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு போட்டோஷாப் மூலமாக முகக்கவசம் வரைந்து பதிவிட்ட சம்பவத்தை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்..!


உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் கைது செய்யப்பட்ட ஒரு நபருடன் முகக்கவசம் இல்லாமல் ஒரு போலீஸ்காரர் போஸ் கொடுத்ததை அடுத்து, உத்தரபிரதேச காவல்துறையினர் தாங்களாகவே ஒரு முகக்கவசத்தை போட்டோஷாப் மூலமாக வரைந்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது..!

இது மிகவும் நுட்பமான முயற்சியாகவும் இல்லை, ஒருவர் இந்த படத்தை கொஞ்சம் பெரிதாக்கி பார்த்தாலே இந்த போட்டோஷாப் வேலை தெளிவாகத் தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த பதிவை வைத்து கிண்டலடித்து பல மீம்ஸ்களை உருவாக்கி, கலாய்த்து வருகின்றனர்..!


தற்போது இந்த இடுகை அவர்களின் அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், நூற்றுக்கணக்கான முறை பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட்களால் அது இன்னும் இணைத்தில் வலம்வந்து கொண்டுள்ளது. இந்த குறிப்பிட்ட இடுகையைப் பற்றி சிலர் நகைச்சுவையாக பேசும்போது, மற்ற பதிவுகளையும் ஆராய்ச்சி செய்ய தொடங்கியுள்ளனர்..!

இது முதல் முறை அல்ல. மே 2020 இல் ஒரு இடுகையில், உத்தரபிரதேச பரேலி காவல்துறை, மக்களின் வாயை மறைக்க ஒரு நீல பேனா போட்டோஷாப்பை பயன்படுத்தியது, இதனை கலாய்த்து அப்போதே நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்..!