தமிழ்நாடுபாஜக - BJP

பவுடர் மஞ்சளை அரைக்க அம்மி, வெறும் உரலை இடித்த உலக்கை, பஞ்சு பொங்கல், உலக மகா நடிப்புடா சாமி

மதுரை: மதுரையில் பாஜக மகளிர் அணியினர் சர்க்கரை பொங்கலுக்கு பதிலாக பஞ்சு பொங்கலிட்ட வினோத சம்பவம் நடந்துள்ளது.
தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் நம்ம பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம், காயாமொழி பகுதியில் பாஜக மகளிரணியினர் வரிசையாக பானைகளை வைத்து நெருப்பு மூட்டி பொங்கலிட்டனர்.
அது போல் பவர்ஸ்டார் சீனிவாசனும் செங்கத்தில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். இவர்களும் சிறிய அளவிலான பானையை வைத்து பொங்கல் கொண்டாடினர்.

பாஜக
இந்த நிலையில் மதுரையில் நடிகையும் பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தலைமையில் விழா கொண்டாடிய பாஜக மகளிரணியினர் ஒரே ஒரு பானையில் மட்டும் நிஜ பொங்கலை வைத்துவிட்டு மற்ற இடங்களில் மண்பானைகளில் பஞ்சை சுற்றி வைத்து பால் பொங்குவது போல் செட்டப் செய்து வைத்திருந்தனர்.அரைத்த சம்பவம்
அப்போது செய்தியாளர்கள் படம் பிடிப்பதை பார்த்த மகளிரணியினர் உண்மையாகவே பொங்கலிடுவதை போல் நடித்தனர். பாரம்பரிய முறையை காட்டிக் கொள்ள பொடி மஞ்சளை வைத்து அம்மியில் அரைத்த சம்பவங்களும் நடந்தன.

குஷ்பு
ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவதை போல் அரிசியே இல்லாத உரலில் பூமி அதிரும் அளவுக்கு உலக்கையை வைத்து குத்தினர். ஆனால் குஷ்பு வைத்தது மட்டும் நிஜ பொங்கல்தான். ஒரு பெண் வெல்லத்தை பானையில் போட அதை குஷ்பு கிளறிவிட்டார்.

அதகளம்
பொங்கல் கிளறும் போது குஷ்புவுக்கு அருகே இருந்த ஒரு பெண் போட்டோவுக்கு போஸ் கொடுக்க முட்டியை மடக்கிய பொசிஷனில் நின்றிருந்தார். குஷ்புக்கு முன்பே செம ஆக்டிங் கொடுத்த மகளிரணியினரின் அட்ராசிட்டீஸ் வைரலாகி வருகிறது.

Related Articles

Back to top button