விவசாயிகள் பிரியாணியை சாப்பிட்டுவிட்டு பறவைக் காய்ச்சலை பரப்பி வருகிறார்கள்: பாஜக எம்.எல்.ஏ

0
11

போராட்டம் என்ற பெயரில் விவசாயிகள் பிரியாணியை சாப்பிட்டுவிட்டு பறவைக் காய்ச்சலை பரப்பி வருவதாக பாஜக எம்.எல்.ஏ. மதன் திலாவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுளது..!


மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியின் பல்வேறு எல்லைகளில் விவசாயிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்தி வரும் இந்த முற்றுகைப் போராட்டம் இன்று 46-வது நாளாக நீடிக்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன..!


இந்நிலையில் டெல்லியில் பறவைகள் அடுத்தடுத்து இறந்து வருவதை தொடர்புப்படுத்தி விவசாயிகளை இழிவுபடுத்தும் வகையில் பாஜக எம்.எல்.ஏ. கூறியகருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..!


ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. மதன் திலாவர் கூறியதாவது, 
” விவசாயிகள் என்று கூறிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவோர் நாட்டைப் பற்றி கவலைப்படுவதில்லை. சுற்றுலா மற்றும் ஆடம்பரங்களை நன்கு அனுபவித்து மகிழ்கிறார்கள்..!


விவசாயிகள் என்று அழைக்கப்படும் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்த நபர்கள் எந்தவொரு இயக்கத்திலும் பங்கேற்கவில்லை. ஆனால் கோழி பிரியாணி மற்றும் உலர்ந்த பழங்களை நன்றாகச் சாப்பிடுகின்றனர். பறவைக் காய்ச்சலை பரப்புவதற்கான சதி இது. 
போராடுவதாக கூறும் அவர்களிடையே போராளிகள் மற்றும் திருடர்கள் இருக்கலாம், அவர்கள் விவசாயிகளின் எதிரிகளாகவும் இருக்கலாம். அவர் அனைவரும் நாட்டை அழிக்க விரும்புகிறார்கள். அவர்களை போராட்டக் களங்களில் இருந்து அரசு அகற்றாவிட்டால், பறவைக்காய்ச்சல் நாட்டில் ஒரு பெரிய பிரச்சினையாக மாறும் ” என்று கூறினார்.