நாட்டு மக்களுக்கு முன் மாதிரியாக கொரோனா தடுப்பூசியை எடுத்து கொள்ளும் சவூதிமன்னர் சல்மான்

0
85

கரோனா தொற்றைத் தடுப்பதற்கான ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை செளதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்ஸிஸ் வெள்ளிக்கிழமை செலுத்திக்கொண்டார்..!

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஃபைஸா், மாடா்னா நிறுவனங்கள் தயாரித்த கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ரஷியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது..!

இந்த சூழலில் பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசியைப் பயன்பாட்டுக் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. செளதி அரேபியாவில் ஃபைசர் நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது..!

இந்நிலையில் தடுப்பூசி குறித்த மக்களை அச்சங்களைப் போக்கும் விதமாக வெள்ளிக்கிழமை செளதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்ஸிஸ் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.செளதி மன்னர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் தவ்ஃபிக் அல்ராபியா நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவித்தார்..!