இந்தியா

பெண் கூட்டு பலாத்காரம் : வெறி தீராததால் பிறப்புறுப்பில் இரும்பு ராடை நுழைத்த கொடூரம், பூசாரி தப்பி ஓட்டம்

உத்தரபிரதேசத்தில் கோயிலுக்கு சென்ற 50 வயதான பெண்ணை கோயிலின் பூசாரி உள்ளிட்ட 2 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் வீசி எறியப்பட்டார். சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது.

ஆனாலும், டெல்லி நிர்பயா சம்பவத்தை போன்ற கொடூரங்கள் அதன் பிறகும் அவ்வப்போது அரங்கேறத்தான் செய்கின்றன. தற்போது உத்தரப்பிரதேசத்தில் கொடூர பலாத்கார கொலை சம்பவம் நடந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், பாடவுன் அருகே உகாய்தி கிராமத்தை சேர்ந்தவர் அங்கன்வாடி பெண் ஊழியர்(50), கடந்த ஞாயிறு அன்று மாலை கோயிலுக்கு சென்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கோயிலுக்கு சென்ற அந்த பெண்ணை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கடத்தி சென்று காட்டுப்பகுதிக்கு வைத்து அவரை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பெண் உயிரிழந்த நிலையில் சடலத்தை அவரது வீட்டின் அருகே வீசிவிட்டு சென்றுள்ளனர். காணாமல் சென்றவரை பல இடங்களில் தேடிய நிலையில் வீட்டின் அருகே பெண்ணின் சடலம் கிடப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் 18 மணி நேரம் கழித்து தான் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று பெறப்பட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. இதில் பெண்ணை கடுமையாக தாக்கியதில் அவரது விலா எலும்புகள், நுரையீரல், பிறப்புறுப்பு சேதடைந்துள்ளது. இது தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாரை அடுத்து முக்கிய குற்றவாளியான கோயில் பூசாரி, டிரைவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் பூசாரி தலைமறைவாகி விட்டார். 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் 4 தனிப்படை அமைத்து பூசாரியை தேடி வருகின்றனர்.

Related Articles

Back to top button