கொரோனா தடுப்பூசியில் பசுவின் ரத்தம் உள்ளதா.? விளக்கம் கேட்கிறது இந்து மகா சபை

0
9

கொரோனா தடுப்பூசிகளில் பசுவின் இரத்தம் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை தெளிவுபடுத்துமாறு அகில இந்திய இந்து மகா சபா தலைவர் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்..!

அகில இந்திய இந்து மகா சபை தலைவர் சுவாமி சக்ரபாணி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் அவர், ‘’ஆங்கிலேய ஆட்சியில் பசுவின் கொழுப்பால் ஆன துப்பாக்கி தோட்டாக்களை கொண்டு இந்து மதத்தை இழிவுபடுத்தியதுபோல், தற்போது பசுவின் ரத்தம், மாமிசம் மற்றும் கொழுப்பை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து என்ற பெயரில் உடலுக்குள் அனுப்பி இந்து மதத்தை அழிக்கும் நோக்கில் சர்வதேச சதி நடைபெறுகிறது..!

எனவே கொரோனா வைரஸ் தடுப்பூசியை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முன், அதில் பசு ரத்தம் கலக்கப்பட்டிருக்கிறதா என்பதை அரசும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தெரிவிக்க வேண்டும்’’  என சுவாமி சக்ரபாணி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்..!