200 ஏக்கரில் அமைய உள்ள ராஜ்கோட் எய்ம்ஸ்க்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

0
299

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 201 ஏக்கர் நிலத்தில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி நாளை மறுநாள் 31ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.புதுடெல்லி:-
மத்திய அரசு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில் நாளை மறுதினம் (டிசம்பர் 31-ந்தேதி) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இந்தவிழா காணொலி காட்சி மூலம் நடக்கிறது. இதில் குஜராத் கவர்னர், முதலமைச்சர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 201 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை ரூ .1,195 கோடி செலவில் கட்டப்படும் என்றும் வரும் 2022ம் ஆண்டு  நடுப்பகுதியில் மருத்துவமனை பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 
மேலும், அதிநவீன 750 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் பகுதி அமையவுள்ளது. இங்கு 125 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 60 நர்சிங் இடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிக்கல் மட்டுமே நாட்டுப்பட்டுள்ளதே தவிர மருத்துவமனை அமையவில்லை என்று ஆர்.டி.ஐ விளக்கம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது