அரசியல் செய்திகள்இந்தியாகாங்கிரஸ்பாஜக - BJPபிற மாநில செய்திகள்

நான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன், அதை கேட்க நீ யார்.? பாஜகவினரிடம் நேருக்குநேர் கேள்வி எழுப்பிய சித்தராமையா

பசு விவகாரத்தில் கருத்துச் சொல்ல காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பயப்படுகிறார்கள் – எனக்கு அந்த பயமில்லை. நான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். உணவை தேர்வு செய்வது அவரவர் உரிமை – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா

நான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன், அதைக் கேட்க நீ யார் என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையில் பசுக்களை உணவுக்காக கொல்வதை தடை செய்து, கர்நாடக பாஜக அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்நிலையில், இதுகுறித்து தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார் சித்தராமையா.

காங்கிரஸ் கட்சியின் தொடக்க நாள் விழாவில் பேசிய சித்தராமையா, நான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். அதை தடுக்க நீ யார் என்ற கேள்வியை ஒருமுறை சட்டப்பேரவையிலேயே எழுப்பியதை சுட்டிக் காட்டினார். உணவை தேர்ந்தெடுப்பது எனது உரிமை. அதை கேள்வி கேட்க நீ யார். நீ உனக்கு என்ன பிடிக்கிறதோ, அதை சாப்பிடு. நான் வந்து தடுக்க மாட்டேன் என்றேன்.



காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மாட்டிறைச்சி விவகாரத்தில் பாஜகவின் கொள்கையை ஆதரிப்பதாகவும், அதுபற்றி கருத்துச் சொல்ல அஞ்சுவதாகவும் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார். ஆனால் தனக்கு அந்த அச்சம் இல்லை என கூறியுள்ளார்.

கர்நாடக அரசின் பசுவதை சட்டம் விவசாயிகளைத் தான் பாதிக்கும் என தெரிவித்துள்ளார் சித்தராமையா. வயது முதிர்ந்த பசுக்கள், எருமைகளை விவசாயிகள் எங்கே அனுப்புவார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். அவற்றை பராமரிக்க நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் தேவைப்படும் என்றும், அதனை யார் விவசாயிகளுக்கு கொடுப்பார்கள் என்றும் சித்தராமையா வினவியுள்ளார்.

பசுக்களை விவசாயிகளும் கடவுளாக வணங்குகின்றனர் என தெரிவித்த சித்தராமையா, அவற்றை பராமரிக்க முடியாத காரணத்தினால் தான், விவசாயிகள் இறைச்சிக்கு அவற்றை பயன்படுத்துவதாக தெரிவித்தார்.

பசு சட்டத்தை மீறுபவர்களுக்கு 5 ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுவதோடு, ஒரு மாட்டிற்கு 50 ஆயிரம் வீதம், 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.



இந்தச் சட்டத்தால், விவசாயிகள், உணவகங்கள், இறைச்சிக் கூடங்கள், தோல் தொழில்கள் என பலதரப்பட்டவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்ற கவலை எழுந்துள்ளது.

Related Articles

Back to top button