திருச்சியில் திறந்தவெளி சாக்கடையால் பலியான சிறுவன் – பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாத மாநகராட்சி

0
6

திருச்சி தென்னூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவருடைய 5 வயது மகன் யஸ்வந்த் நேற்று மாலை வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது வீட்டின் அருகில் உள்ள சுமார் 5 அடி ஆழமுள்ள சாக்கடையில் சிறுவன் இறந்து கிடந்தது தெரியவந்தது.இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும் இங்கு திறந்த வெளியில் உள்ள சாக்கடை கால்வாய் என்பது பல ஆண்டுகளாக மூடப்படாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். திருச்சி மாநகராட்சிக்கு அதிகாரிகளிடம் பலமுறை இது தொடர்பாக புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர். இறந்துபோன யஸ்வந்த் குழந்தை வீட்டுக்கு முன்னதாகவே 6 அடி அகலமுள்ள 7 அடி ஆழம் கொண்ட திறந்த வெளி சாக்கடையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அப்பகுதியில் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு திறந்தவெளியில் சாக்கடை கழிவு நீர் ஓடுகிறது. உடனடியாக மூடி குழந்தைகளின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முன்னதாக யஸ்வந்த் மதியம் ஒரு ஐஸ் வண்டி வந்ததாகவும் அதனை பின்தொடர்ந்து வந்துள்ளார் ஒருவர் வீட்டுக்குச் செல்லுமாறு தெரிவித்த பொழுது வீட்டுக்கு திரும்பும் பொழுது அவரை சடலமாக மீட்ட பகுதிக்கு அருகே கொய்யா மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தில் எதுவும் கொய்யா காய் பறிக்க முயற்சி செய்து திறந்தவெளி சாக்கடையில் விழுந்து இருக்கலாம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த திறந்த வெளி சாக்கடை கால்வாய் என்பது உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவ சுப்பிரமணியத்திடம் கேட்டபோது உடனடியாக இந்த திறந்த வெளி சாக்கடை கால்வாய் மூடப்படும் என தெரிவித்தார்.