10 வயது சிறுமியை 5 ஆண்டு காலமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல் கைது

0
7

பெற்றோரை இழந்த சிறுமியை தான் வளர்ப்பதாக கூறி அழைத்து வந்து பெண், கட்டாயப்படுத்தி சிறுமியை 5 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி கொடுமைப்படுத்தியுள்ளார்.


மதுரை கோரிப்பாளையம் பகுதியில் பெற்றோரை இழந்த 10 வயது சிறுமியை கடந்த 2015ஆம் ஆண்டு ஜெயலட்சுமி என்ற உறவினர் தான் வளர்த்து காப்பாற்றுவதாக கூறி அழைத்து வந்துள்ளார். ஜெயலட்சுமி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், தன்னுடன் அழைத்து வந்த சிறுமியையும், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஜெயலட்சுமி , பாலியல் தொழிலில் முகவர்களாக செயல்படும் தனது தோழிகள் அனார்கலி, சுமதி, சந்திரா, தங்கம், ஜெயலட்சுமி, ஆட்டோ ஓட்டுநர் சரவணபிரபு ஆகியோருடன் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட்டு அதிகப்பணத்தை சம்பாதித்துள்ளார்.


இந்நிலையில் மதுரை உத்தங்குடி அருகேயுள்ள விஐபி நகர் பகுதியில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக ஆள் கடத்தல் மற்றும் விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து ஆய்வாளர் ஹேமமாலா தலைமையிலான தனிப்படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு 16 வயது சிறுமியை மீட்டனர். இது தொடர்பாக 5 பெண் முகவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சரவண பிரபு உள்ளிட்ட 7 பேரை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
சிறுமியிடம் நடத்திய விசாரணையில், கடந்த 3ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்ட நபர்களின் விவரங்களை சேகரித்து தனிப்படை போலீசார், அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.