எங்கள் வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா எங்களுடன் பேசவில்லை – உணவளித்தவர் குற்றச்சாட்டு

0
8

இரண்டு நாட்கள் பயணமாக மேற்குவங்க மாநிலம் சென்ற உள்துறை அமைச்சர், அங்குள்ள ஏழை பாடகர் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார். அதன் புகைப்படங்கள்சமூஉக வலை தளங்களில் வைரலாகின.
இந்த நிலையில், எங்கள் வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட அமித்ஷா, எங்களுடன் பேசக் கூட இஎல்லை என அவருக்கு விருந்தளித்த நாட்டுப்புற பாடகர் பசுதேப் தாஸ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும இந்திய பாஜக அரின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் 28வது போராட்டம் நடத்தி வருகின்றனர்..!


ஆனால், 2 நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்ற அமித்ஷா, அங்குள்ள விவசாயி ஒருவர் வீட்டில், தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டார். விவசாயிகளை கவர அமித்ஷா புது முயற்சியை கையாண்டுள்ளார் என பலரும் கருத்து தெரிவித்தனர்.
அமித்ஷாவுக்கு விருந்து கொடுத்த நாட்டுப்புற பாடகரான பசுதேப் தாஸ், அமித்ஷா தங்களிடம் ஏதும் பேசவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்..!


அரசு ஏற்கனவே எங்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது, இருந்தாலும், சமீபத்தில் எம்.ஏ. தேர்ச்சி பெற்ற எனது மகளின் கல்விக்கு நிதியளிக்க நான் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்களைப் பற்றி அவருக்கு தெரிவிக்க விரும்பினேன். ஆனால், அவர் ஏதும் பேசவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து அவரை சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், அவருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்..!