குஜராத் : திருமணத்தன்று மாதவிடாய்… விவாகரத்துகோரி அதிர்ச்சியளித்த கணவன்

0
7

அகமதாபாத் : திருமணத்தன்று மாத விடாய் காலத்தில் இருந்ததை மறைத்துவிட்டதாக கூறி மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கணவன் நீதிமன்றத்தை நாடியுள்ள வினோதம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் வடோதராவைச் சேர்ந்த பட்டதாரி ஒருவரே மனைவிக்கு எதிராக நீதிமன்றத்தை நட்டியவர். கடந்த ஜனவரியில் ஆசிரியர் பணியில் உள்ள பெண்ணை அவர் திருமணம் செய்துள்ளார். சில மாதங்களில் தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டு மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் வடோதரா குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு கணவன் வழக்கு தொடுத்துள்ளார்.அதில் மனைவி தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ ஒத்துழைப்பு தரவில்லை என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் குறிப்பிட்டுள்ளார் குறிப்பாக வினோதமான குற்றச்சாட்டு ஒன்றையும் கூறியிருக்கிறார் அவர்.அதாவது, திருமணமான நாளன்று, மாதவிடாய் காலத்தில் இருந்ததை தன்னிடமும் தனது தாயிடமும் மறைத்துவிட்டதாக விவகாரத்து மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். திருமணம் முடிந்து கோயிலுக்கு புறப்பட்டபோது தான் தங்களிடம் மனைவி உண்மையை கூறினார் என்றும் இதனால் தங்களது மத நம்பிக்கை புண்பட்டுவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான பல்வேறு அநீதிகளை எதிர்த்து பல்வேறு தரப்பினும் குரல் கொடுத்து யாரும் நிலையில், வடோதராவில் விவகாரத்திற்கு கணவன் கூறியுள்ள காரணம் சமூக சிந்தனையாளர்களையும் பெண்ணியவாதிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.