உ.பி-யில் கொடூரம்: பெண்ணின் கருவை கலைத்த பின் ஆதாரமில்லை என விடுதலை

0
51

இந்து பெண்ணும் இஸ்லாமிய ஆணும் திருமணம் செய்து கொள்வதை லவ் ஜிகாத் என சித்தரித்து அதற்கு எதிராக பாஜக அரசு சட்டம் இயற்றி உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த சட்டத்தின் கீழ் 22 வயதுடைய கர்ப்பமாக ஒரு பெண் கைது செய்யப்பட்டு, கருகலைப்புக்கு ஆளகியுள்ளார்.


அவருடன் கைது செய்யப்பட்ட 27 வயதான அவர் கணவர் ரஷீத் எந்த தகவலுமின்றி அறிவிக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி அரசு இல்லத்தில் வைக்கப்பட்ட நிலையில்,  உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத் நகரில் உள்ள அரசு இல்லத்தில் இருந்து தனது மாமியாருக்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட முஸ்கன் ஜகான் தனக்கு திடீரென ரத்தப் போக்கு ஏற்பட்டு கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


இதுகுறித்து செய்தியாளர்ககளிடம் தெரிவித்த அவரது மாமியார், “என் மருமகள் அடைக்கப்பட்டுள்ள இல்லத்தில் ஒரு ஊழியர்  ஊசி போட்டு கட்டாய கருக்கலைப்பு செய்துள்ளார். தனது மருமகள் இஸ்லாம் மதத்திற்கு மாறி ஒரு இஸ்லாமியரைத் திருமணம் செய்து கொண்டதால் இந்த கொடுமைக்கு ஆளகியுள்ளார். இந்த மதச்சார்பற்ற நாட்டில் எனது பேரக்குழந்தை பிறக்கும் முன்பே அதற்குப் பிரியாவிடை கொடுத்து அனுப்பி விட்டனர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.


பின்னர். 15 நாள்கள் கடந்த நிலையில் ரஷீத்தின் மனைவி மாஜிஸ்ட்ரேட்டிடம் ஆஜராகி, தான் மேஜர், தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே மதம் மாறித் திருமணம் செய்துகொண்டதாகவும், யாரும் தன்னை வற்புறுத்தவில்லை என்றும் தெரிவித்த பிறகு, அவரை கணவரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.


அங்கு தனக்கு ஊசி போட்ட பிறகு, கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் வயிறு வலி என்று கூறியபிறகும் காப்பகத்தினர் அலட்சியமாக இருந்ததாகவும் உடல்நிலை மிகவும் மோசமானதும்தான் தன்னை மருத்துவமனையில் சேர்த்தனர் என்றும் குற்றம்சாட்டி இருந்தார். காப்பகம் மற்றும் மருத்துவமனை தரப்பினர், இதற்கு விளக்கம் அளிக்கவில்லை.
இதற்கிடையே இந்து பெண்ணைக் கட்டாய மதமாற்றம் செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லாததால், அவரது கணவர் ரஷீத் அலியை உத்தரப்பிரதேச நீதிமன்றம் விடுவித்துள்ளது. 13 நாள்கள் சிறையில் இருந்த இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


அரசு காப்பகத்தில் கலைந்த பெண்ணின் கரு கலைப்புக்கு பதில் சொல்வது யார்? என்று ரஷீத் தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.