திருவாரூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 30 ஆம் தேதி போராட்டம் – திருவாரூர் மாவட்ட SDPI செயற்குழுவில் அறிவிப்பு

0
4

திருவாரூரில் நடைபெற்ற SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் | விவசாயிகளுக்கு ஆதரவாக மாவட்ட தலைநகரில் போராட்டம் அறிவிப்பு


SDPI கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று (22.12.2020) மாலை 5 மணியளவில் துவங்கி மாவட்ட தலைவர் A.தப்ரே ஆலம் பாதுஷா அவர்களின் தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் துவக்கமாக மாவட்ட பொதுச்செயலாளர் M.விலாயத் உசேன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

இந்த கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் 30 ஆம் தேதி அன்று திருவாரூர் மாவட்ட தலைநகரில் விவசாயிகளுக்கு ஆதரவாக SDPI கட்சியின் சார்பில் நடைபெற உள்ள மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் இந்த போராட்டத்தில் திரளானோரை கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தின் இறுதியாக மாவட்ட செயலாளர் M.A.லத்தீஃப் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.