நெஞ்சை உலுக்கும் கொடூரம் : இச்சைக்கு இணங்க மறுத்த 5 வயது சிறுமியை கொலை செய்து சடலத்துடன் பாலியல் உறவு கொண்ட கொடூரன் கைது

0
6

புபனேஸ்வர் : ஒடிசாவில் பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்த 5 வயது சிறுமியை கொலை செய்து சடலத்துடன் பாலியல் உறவு கொண்ட இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒடிசா மாநிலத்தில் கடந்த ஜூலை 14ம் தேதி 5 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் அருகே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து அம்மாநில அரசின் உத்தரவின் பேரில் ஒடிசா காவல்துறை இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்தது. இந்நிலையில் பக்கத்து வீட்டில் இருந்த இளைஞர் ஒருவர் அந்த சிறுமியை கொலை செய்து சடலத்துடன் பாலியல் உறவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக பேட்டி அளித்த  காவல்துறை சிறப்பு புலனாய்வு அதிகாரி அருண் போத்ரா, சிறுமியின் பக்கத்து வீட்டில் இருந்த இளைஞர் சிறுமியை கொலை செய்வதற்கு முன்னர் நாள் குழந்தை ஆபாசப்படங்களை அதிகம் பார்த்ததாகவும் அடுத்த நாள் சிறுமியின் பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்த இளைஞர் சிறுமியை கொலை செய்து விட்டு அந்த உடலை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த சிறுமியும் இளைஞரின் சகோதரியும் நெருங்கிய தோழிகள் என்றும் அருண் போத்ரா பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.