மோடிக்கு இரத்தத்தில் கடிதம் எழுதிய விவசாயிகள்

0
43

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை பாஜக  அரசு ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பாஜக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனாலும் விவசாயிகளுடன் பாஜக அரசு சரியான பேச்சுவார்த்தை நடத்தாததால் தோல்வியில் முடிந்தது. இதனால் 27வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விவசாயிகள் போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வளர்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என பாஜக அரசு உறுதியளித்தாலும், 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும்வரை போராட்டத்தை தொடர்வது என முடிவெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்தும் ஆதரவுகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மோடிக்கு இரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளனர்.