உங்கள் குழந்தை இறந்துவிட்டது தெரியுமா.? லவ் ஜிகாத் என்று போலி வழக்கில் சிறையில் இருந்து வந்த இளைஞரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி

0
54உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி, முஸ்லீம் மதத்திற்கு மாற்றியதாக கூறி, பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை, ஆதாரங்கள் இல்லை என கூறி நீதிமன்றம் விடுவித்த நிலையில், சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்த அந்த இளைஞரிடம் உங்கள் மனைவியின் கரு கலைந்து விட்டது தெரியுமா என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்ப அவர் அந்த இடத்திலேயே உடைந்து போனார்.மொராதாபாத்தை சேர்ந்த ரஷித் என்ற இளைஞரும், பிங்கி என்ற பெண்ணும், கடந்த ஜுலை மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் துணை அமைப்பினரான பஜ்ரங் தளத்தினர், ரஷிதின் வீட்டிற்கே சென்று பிரச்னை செய்த நிலையில், காவல்துறை, ரஷிதையும், அவரது சகோதரையும் கைது செய்தனர்.

பிங்கியை அரசு காப்பாகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போடப்பட்ட ஊசியால் 3 மாத கர்ப்பிணியாக இருந்த, பிங்கியின் கரு கலைந்தது.

இந்தச் செய்தி உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரஷித் தன்னை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை என்றும் தான் விரும்பியே அவரை திருமணம் செய்ததாகவும், பிங்கி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். இதனால் ரஷிதை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்ட நிலையில, சிறைச்சாலைக்கு வெளியே இருந்த செய்தியாளர்கள், உங்கள் மனைவியின் கரு கலைந்து விட்டது தெரியுமா என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்ப அவர் அந்த இடத்திலேயே உடைந்து போனார்.

மேலும் தனது வீட்டிற்கு வந்து, தனது குடும்பத்தினரிடம் வன்முறையில் ஈடுபட்ட பஜ்ரங்தளம் அமைப்பினர் மீது எந்த வழக்கும் தொடுக்கப்போவதில்லை என்றும் தங்களை நிம்மதியாக வாழ விட்டால் போதும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து, வெளியேறி, உத்ரகாண்டில் உள்ள டேராடூனுக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் மீதான வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெறும் என உத்தரப்பிரதேச காவல்துறை கூறியுள்ளது. வீட்டிற்கு வந்து தனது மனைவியை சந்தித்த ரஷிதை பார்த்து, பிங்கி கதறி அழுத புகைப்படம் வட இந்திய ஊடகங்களில் வைரலாகி வருகிறது.