பெங்களூர் விமான நிலையத்திற்கு துப்பாக்கியுடன் வந்த பாஜக தலைவர்

0
10

கர்நாடகவில் பாஜக கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. மனப்பா வஜ்ஜல். இவர் பெங்களூருவில் இருந்து ஐதராபாத்திற்கு விமானத்தில் பயணம் மேற்கொள்ள இருந்தார். அந்த விமானத்தில் பயணம் மேற்கொள்ள இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.


அப்போது மனப்பா வஜ்ஜல் கையில் வைத்திருந்த ஒரு பையிலும் சோதனை நடத்தப்பட்டபோது அந்த பையில் ஒரு துப்பாக்கி, 16 துப்பாக்கி குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மனப்பா வஜ்ஜலை பிடித்து, விமான நிலைய காவல்துறையினரிடம், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர்.

அவரிடம் போலிசார் விசாரணை நடத்தியபோது துப்பாக்கிக்கு தன்னிடம் உரிமம் உள்ளது என்றும் தனது பையில் துப்பாக்கி குண்டுகள் இருந்ததை கவனிக்கவில்லை என்று மழுப்பியுள்ளார். பின்னர் துப்பாக்கியையும், குண்டுகளையும் போலிசார் பறிமுதல் செய்து மனப்பா வஜ்ஜலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.