இந்தியாதமிழ்நாடுபாஜக - BJP

பாஜகவுக்கு ஓட்டு போடாவிட்டால் காரின் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள் தான் அரசியல்வாதியாக வருவர் : பாஜக அண்ணாமலை

தமிழக மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ரூ. 2000 ஆக தருவதுதான் தமிழக அரசியல் என்று பாஜகவின் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.




தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அதிமுக தேர்தல் பிரச்சாரத்தை அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆரம்பித்துள்ள நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஜனவரியில் பரப்புரையை தொடங்குகிறார். இந்த சூழலில் முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக – பாஜக இடையே மீண்டும் சலசலப்பு ஏற்பட தொடங்கியுள்ளது.



இந்நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வேளாண் சட்ட நன்மைகள் குறித்து மக்கள் மத்தியில் பேசிய தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை, ” தமிழக மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ரூ. 2000 ஆக தருவதுதான் தமிழக அரசியல். 2ஆயிரத்தை நம்பி 5 ஆண்டுகளை தமிழக மக்கள் அடகு வைத்து விடக்கூடாது. பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை எனில் காரின் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள் தான் அரசியல்வாதியாக வருவர் ” என்று கூறியுள்ளார்.


சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் பாஜக, அக்கட்சியையே கடுமையாக விமர்சித்து வருவது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button