அதிமுகவை மீண்டும் கேவலப்படுத்திய பாஜக

0
5

தமிழக மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என்றால் தமிழகத்திற்கு டயரில் விழுந்து கும்பிடும் அரசியல் தலைவர்கள்தான் கிடைப்பார்கள் என மாநில பாஜக துணை தலைவர் அண்ணாமலை பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் கூட்டணி கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை தொடர்ந்து வருகிறது.


இந்நிலையில் நேற்று பாஜக கூட்டம் ஒன்றில் பேசிய அக்கட்சியின் துணை தலைவர் அண்ணாமலை ‘தமிழக மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு 2 ஆயிரம் என வழங்குவதுதான் தமிழக அரசியல். பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ள நிலையில் அண்ணாமலை இப்படி பேசியிருக்கிறார்.
இந்த தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் டயருக்கு கீழ் விழுந்து கும்பிடும் அரசியவாதிகள் ஆட்சிக்கு வருவார்கள்’ என பேசியுள்ளார்.

அண்ணாமலையின் இந்த பேச்சு கூட்டணி கட்சியான அதிமுகவை  தாக்கும்படி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.
முன்னதாக தற்போது இருக்கும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும். ஆனால், முதல்வர் வேட்பாளர் யார் என்பதையும், யாரை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம் என எல். முருகன் பேசியதற்கு, அதிமுகவினர் கண்டனம் தெரிவித்ததோடு முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் பாஜக தனித்து போட்டியிட வேண்டியது நிலைமை வரும் என தெரிவித்தனர்.