2000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, வாக்களித்தால் கார் டயரில் விழுந்து கும்பிடுவோர் தான் ஆட்சி செய்வார்கள் : பாஜக துணை தலைவர் அண்ணாமலை பேச்சு

0
36

கோவை : 2000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, வாக்களித்தால் கார் டயரில் விழுந்து கும்பிடுவோர் தான் ஆட்சி செய்வார்கள் என்று பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை விமர்சித்து இருப்பது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது..!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடைபெற்ற வேளாண் சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,  மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தேர்தல் நேரத்தில் 2000 ரூபாயாக திருப்பிக் கொடுக்கவே தமிழக அரசியல் என்று விமர்சித்துள்ளார்..!
2000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு மக்கள் வாக்களித்தால், கார் டயரில் விழுந்து கும்பிடுவோர்தான் ஆட்சி செய்வார்கள் என்று அதிமுக தலைவர்களை பெயர் குறிப்பிடாமல் அண்ணாமலை கிண்டலடித்துள்ளார். அதிமுக – பாஜக கட்சிகள் இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும் இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சித்து கொள்கின்றனர். குறிப்பாக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியை அதிமுக அறிவித்த பின்னும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தேசிய தலைமையே அறிவிக்கும் என்று மாநில பாஜக தலைவர் முருகன் கூறிவந்தார். இந்த சர்ச்சை சற்று ஓய்ந்த நிலையில், அதிமுக தலைவர்களையும் முதல்வர் எடப்பாடி அறிவித்த பொங்கல் பரிசு பற்றியும் பெயர் குறிப்பிடாமல் பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து இருப்பது அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..!