விவசாயிகளுக்கு ஆதரவாக SDPI கட்சியின் மாபெரும் போராட்டம் இயக்கம் – SDPI அறிவிப்பு

0
8

விவசாயிகளின் விரோதி மோடி!
விவசாயிகளுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாபெரும் போராட்ட இயக்கம்!


இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு விரோதமாக கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லியின் எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு விவசாய, தொழிலாளர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனால், பெரும்பான்மை மமதையில் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக சட்டத்தை இயற்றியுள்ள அரசு, அச்சட்டங்களை ரத்து செய்யும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருவதோடு, போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து விவசாயிகளை கொச்சைப்படுத்தி வருகின்றது.

மத்திய பாஜக அரசின் இத்தகைய விவசாய விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அந்த சட்டங்களில் உள்ள விவசாய மற்றும் மக்கள் விரோத அம்சங்கள் குறித்து மக்களுக்கு விளக்கும் வகையிலும், டிசம்பர் 26 முதல் ஜனவரி 05 வரை ‘விவசாயிகளின் விரோதி மோடி!’ என்ற போராட்ட இயக்கத்தை நடத்த எஸ்.டி.பி.ஐ. கட்சி தீர்மானித்துள்ளது.

துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சுங்கச் சாவடி முற்றுகை, மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை போன்றவை வாயிலாக தமிழகம் முழுவதும் இந்த போராட்ட இயக்கம் மிக வீரியமாக நடைபெறும். விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் இந்த போராட்ட இயக்கத்தில் அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் வெற்றிபெற குரல்கொடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ScrapAntiFarmerActs #BJPkilledDemocracy #PeoplePolitics #JoinSDPI