பிரச்சாரம் செய்ய வந்த பாஜகவினரை விரட்டியடித்த புதுச்சேரி இளைஞர்கள்

0
73

புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தை பா.ஜ.க துவங்கியுள்ள நிலையில் காலாப்பட்டு சட்டமன்றத் தொகுதியின் கனகச்செட்டிகுளம் பகுதியில் முதல் பிரசாரத்தை பா.ஜ.கவினர் நேற்று காலை துவக்கினர்.

இதில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கோஷங்களை முன்நிறுத்தி மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா துவக்கி வைத்தார். பாஜக மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் தினமும் 3 தொகுதிகளில் பிரசாரம் நடத்தி வருகின்றனர்.திருபுவனை கிராமத்தில் பெரிய பேட் என்ற பகுதிக்கு பிரச்சார வாகனம் சென்ற போது அங்குள்ள இளைஞர்கள் அவர்களை விரட்டி அனுப்பியுள்ளனர். தங்களது பகுதியில் பிரசாரம் செய்ய கூடாது, அமைதியாக செல்ல வேண்டும் என கூறி பாஜக-வினரை விரட்டியடித்தது மட்டுமின்றி பாஜகவினரின் துண்டு பிரசுரத்தையும் கிழித்து எறிந்தனர்.

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நியாயப்படுத்தி பாஜக-வினர் பிரசாரம் செய்ததை கண்டித்து அவர்களை விரட்டினர். பின்னர் காவல்துறையினர் பாஜகவினரை பாதுகாப்பாக வெளியே அனுப்பினர்.