பல்கலை ஆன்லைன் நிகழ்வில் ஆபாசபடம் ஒளிபரப்பு : துணை வேந்தர், பேராசிரியர்கள் அதிர்ச்சி

0
5

தும்கா: ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் உள்ள சிடோ – கன்ஹு முர்மு பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் (வெபினார்) மூலம் தேசிய மனித உரிமை தினம் கடைபிடிக்கப்பட்டது.

ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் புல்பூல் தார் ஜேம்ஸ் இந்த வெபினாரில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, திடீரென ஆபாச புகைப்படத் தொகுப்பு ஒன்று திரையில் காட்டப்பட்டது. அதிர்ச்சியடைந்த பல்கலைக்கழக நிர்வாகத்தினர் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்தனர். சிறிது  நேரத்தில் அந்த புகைப்படத் தொகுப்பு மாயமானது,. இவ்விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் போலீசில் புகார் அளித்தார்.
 
அதில், ‘ஆன்லைன் வகுப்பு நடந்து கொண்டிருந்த போது, அநாகரீகமான மற்றும் ஆபசமான புகைப்படங்களின் தொகுப்பு ஒன்று இடையே பகிரப்பட்டது. இந்த ஆபாச புகைப்பட தொகுப்பை ஆன்லைனின் பகிர்ந்தது எவர் என்று தெரியவில்லை.  சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக போலீஸ் எஸ்பி அம்பர் லக்ரா, தும்கா போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.