பிளாஸ்டிக் தடை திட்டம், தோல்வி திட்டம – தமிழ்நாடு பிளாஸ்டிக் சங்கம்

0
6

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பிளாஸ்டிக் தடை திட்டம் தோல்வி அடைந்த திட்டம் என தமிழ்நாடு பிளாஸ்டிக் சங்கம் தெரிவித்துள்ளது.


சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் செயலாளர் பாலு இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மூலப்பொருட்களின் உற்பத்தி விலையை குறைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி மூலப்பொருட்களின் அபரிவிதமான விலையேற்றத்தால், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர் குற்றம்சாட்டினார்.


அங்கீகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களை அரசு கணக்கில் கொண்டு மூலப்பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என தமிழ்நாடு பிளாஸ்டிக் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்